Saturday, July 28, 2012

அவரா இவர்

இன்று இவரை அறியாதவர்கள் மிகக்குறைவு, அன்று ? என் வாழ்க்கை பாதையை மாற்றிய நாள்.
ஆம்,அடுத்த நாள் இரவே நான் திருப்பதி செல்லும்
வாய்ப்பு கிடைத்தது.( அந்த நிகழ்ச்சியையும் அதன்
பின் என் வாழ்கையில் நடைபெற்ற மாற்றங்களை
தனி பதிவுகளில் காண்போம் ) யார் இவர் என்று நான் கேட்க,மஹாவிஷ்ணுவின் கல்கி அவதாரம் என்றார்.அது எப்படிநடக்கும் அவராஇவர்என்றேன்
ஆம் அவரேதான், உனக்கு என்ன வேண்டுமோ அதை நீ சரியாக கேள் என்று ,கேட்கும் முறையை எனக்கு கற்றுகொடுத்தார். அன்றுதான் தெரிந்துகொண்டேன் நம் கோரிக்கைகளை ஆண்டவரிடம் கேட்பதற்கு கூட வழிமுறைகள் உள்ளன என்று.நானும் இம்முறைகளை பரிசோதித்து பார்க்கிறேன் இன்றுவரை சரியாக இருக்கிறது.அப்படியானால் ஆத்ம பரிசோதனை செய்து,ஆண்டவரிடம் பேசும் வழிதனைகாட்டிகொடுத்து,
என் வாழ்கையில் மாற்றதை ஏற்படுத்திய இவரே என் ஆத்ம குரு ஆவார்.ஆமாம் ஏற்கனவே இருந்த பக்தி முறைகளிள் இவர் என்ன மாற்றம்  செய்துவிட்டார் ? ஒன்றும்இல்லை,நாம் ஆண்டவரிடம் 
பிராத்தனை செய்யும்பொழுது ,ஒவ்வொருவரும் அவர்கள் கற்றுக்கொண்ட வழிகளில் செல்கிறோம்,அதில் கேட்பதை சரியாக கேள் என்பதுதான் இவர் உலகிற்க்கு அளித்த வழிமுறை ஆகும்.
எதை நீ நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்னும் பகவான் கிருஷ்ணன் உடைய உபதேசமே இவரின் வழிகாட்டுதல்.                                                        பக்தனின் அந்தரங்கஆசைகள் கூடநிறைவேற்றும் பகவான் வசம் பக்தன் அடையவேண்டியது சரணாகதி எனும் வழியை,இன்றையதலைமுறையினர் அறியும் வகையில் எளியதாக்கினார்.அதனால் பயன் அடைந்தவர்கள் பலர்.நடப்பது அனைத்தும் நாராயணன்  செயல்,வரும் நாட்களில்...                                                       

Saturday, July 21, 2012

கல்கி

வணக்கம்.
         இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்,ஒருநாள் பிற்பகல்வேளையில்,நான் தெருவில் நடந்து செல்லும்போது எனது நண்பர் (குருஜி) ஆலம்பாடி சங்கரநாராயணன் ரெட்டியார் ( செல்லமாகரெட்டிசார்) அவர்களை சந்தித்தேன்.என் வாழ்கையில் நான்பழகிய வித்யாசமான மனிதர்களில் முதல்நபர்.      (வாழ்கையை இயல்பாக எதிர்கொள்ளும் வித்தையை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்)
அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதுதான்,மேலேஉள்ளபடத்தைகாட்டி,
இதை உண்னோடு வை.உணக்கு தேவையானதை சரியாக கேள் ? அவை கிடைக்கும் என்றார்.உடனே நான் திருப்பதி சென்று மொட்டை போடவேண்டும் என்று ஆசை இவர் எனக்கு செய்வாரா என்றேன்.நிச்சயம் நடக்கும் என்றார்.அது எப்படி நடக்கும் ? படத்தை பையிலோ,கையிலோ, வீட்டிலோ வைத்து கொண்டாள் கேட்டதுகிடைக்குமா ? ஆமாம் யார் இவர்?
எனக்கு அவர் மொட்டை அடித்தாரா ? வாருங்கள் என் வாழ்கையோடு பயணிப்போம் வரும் நாள்களில்...
 
 

Saturday, July 14, 2012

முதல் வணக்கம்


                              பிறந்தது  முதல் இப்போதுவரை வழி நடத்தும்                                                                                           அனைவருக்கும்  
       ஆம் நான் இன்று உங்கள் முன்வரும் இந்த நேரம் வரை  எனக்கு
என்றும் உற்றநண்பனாக ,வழிகாட்டியாக விளங்கும் என் குருநாதர்களுக்கு இந்த வலைப்பூ சமர்ப்பணம். 
      இப்பறந்த பிரபஞ்சத்தில் ,நானும் உங்களுடன் .அனைத்து விதமான தகவல்களுடன் அடுத்து வரும் நாட்களில்...